Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர காவல் துறைக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 டூ வீலரை கமிஷனர் தொடங்கி வைத்தார்

0

'- Advertisement -

தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

 

இந்த வாகனங்களை திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து, மாநகர காவல் ஆணையர் ந.காமினி இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மேற்கண்ட இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், பொதுமக்களிடம் இருந்து வரும் அவசர அழைப்பு எண் 100-ல் பெறப்படும் புகார்களுக்கு, உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க இந்த 10 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்தார்.

 

இந்த வாகனங்கள் மட்டுமின்றி மாநகரில் ஜீப்புடன் கூடிய காவலர்கள் வழக்கமான வாகன சோதனையிலும், ரோந்துப்பணியிலும் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.