திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது.
திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அன்சாரி (வயது 26) மற்றும் சன்ஜய் (வயது 23) ஆகியோருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மார்ச் 26ம் தேதி முன்விரோதம் காரணமாக இந்த 2 பேரும் சரவணனை அரிவாளால் வெட்டி, கற்களால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சரவணன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் அன்சாரி மற்றும் சஞ்சையை கைது செய்து உள்ளனர் .