தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் .
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் நடைபெற்ற
மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் .
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்றும் நாளையும் நடக்கிறது.
கூட்டத்திற்கு பெரேஷன் தலைவர் பாஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ. சேக்கிழார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, மின் கட்டண உயர்வை அதிகப்படுத்தக்கூடிய ஒன்றிய அரசால் அழுத்தம் கொடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
மத்திய தொழிற்சங்கம் அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளர் நலச்சட்ட கள் 44 ஐ 4 ஆக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி
வருகிற 20.05.2025 நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது. மின்சார சட்ட திருத்தத்தை தொடர்ந்து
அனைத்து மாநிலங்களிலும்
மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கி
தொழிலாளர், பொறியாளர் நலன்களை பறிப்பதை
கண்டித்து தேசிய ஒருங்கிணைப்பு குழு மின்சார பொறியாளர் மற்றும் தொழிலாளர் (NCCOEEE) சார்பில் வரும் 26.6.2025 அன்று தேசம் தழுவிய அளவில் நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில்
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலாளர் பங்கேற்று
வெற்றி பெறச் செய்வது.
60,000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் கூடுதல் வேலை பளுக்காரணமாக தினசரி விபத்தில் மரணமடையும் மின் தொழிலாளர்களை பாதுகாத்திடவும் காலி பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர படுத்திட வேண்டும்.
தேர்வு செய்து மீதமுள்ள 5000 கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும்.
கேங்மேன்
தொழிலாளர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு செய்து சொந்த மாவட்டத்திற்கு விருப்ப மாறுதல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.