தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அரியமங்கலம் காமராஜ் நகரில் நடைபெற்ற தெருமுனை பொதுகூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதிவாணன் சிறப்புரை .
திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பொதுக்கூட்டம்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் காட்டூர்பகுதி கழகம் 37 மற்றும் 37(அ) வட்டக் கழகங்களின் சார்பில் அரியமங்கலம் காமராஜர் நகர் ராஜவீதி பகுதியில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர்
நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்
37-வது வட்டச் செயலாளர் விஸ்வநாதன் மற்றும் 16(அ) வட்டக் கழக செயலாளர் தவசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
தலைமை கழக பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன்

கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்
இளம் பேச்சாளர் அலிமாஸ்அலி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் கூட்டத்தில் இறுதியில் மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன்
நன்றி கூறினார்
இக்கூட்டத்தில் மாநகர கழக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன் நூற்கான்,
மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.