Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர்கள் கிழிப்பு

0

'- Advertisement -

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர் கிழிப்பு

 

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியினை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நாளை (23ம் தேதி) நடக்கிறது.

 

இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று பாஜக நிர்வாகிகள் திருச்சியில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருமண்டபத்தில் மகளிர் அணி சார்பில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றையும், மண்டல் தலைவர்கள் வைத்துள்ள மற்றொரு பேனரையும்

Suresh

மர்ம நபர்கள் கத்தியால் கிழித்துள்ளனர்.

 

இதனால் திருச்சியில் பாஜக நிர்வாகிகள் மத்தியில்

பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.