ஸ்ரீரங்கத்தில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது.
ஒருவர் தப்பி ஓட்டம்.
ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தோப்பு குடிநீர் தொட்டி பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ககப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 46), குமார் என்பவர் மனைவி நிர்மலா (வயது 54) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
இதே போல் திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீஸ் சரகம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பெலிக்ஸ், சுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.