திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக்கில் முதல்வர் படத்தை ஒட்டிய பாஜக பெண் நிர்வாகி கைது. கழிப்பறையில் பாஜக தலைவர் படத்தை ஒட்டிய திமுகவினர் மீது என்ன நடவடிக்கை?
மணப்பாறையில் நகர பெண் துணை தலைவர் டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் படத்தை ஒட்டியதை முன்னிட்டு அவரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர் . தகவல் அறிந்து மணப்பாறை நகரத் தலைவர் தலைமையில் பாஜகவினர் காவல் நிலையம் சென்று முற்றுகையிட்டு ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நள்ளிரவில் ஜாமினில் வெளியே அழைத்து வந்தனர் அந்த பெண் நிர்வாகியை .
இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் துறையூரில் பிஜேபி மகளிர் அணி நிர்வாகி ஒருவர் மதுபான கடைகளில் தமிழக முதல்வரின் போட்டோவை ஒட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் பிஜேபி தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறை கட்டிட பகுதியில் வெளிப்புற சுவரில் ஒட்டியுள்ளனர்.
துறையூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் சாட்டையால் அண்ணாமலை அடித்துக் கொள்வது போன்று உள்ள அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பிஜேபி மகளிர் அணி நிர்வாகி வீட்டு சுவரிலும் அண்ணாமலையின் போட்டோவை திமுக நிர்வாகிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இவர்கள் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன் என பாஜகவினர் கேள்வி கேட்டுள்ளனர் .