திருச்சி 55வது வார்டில் திசை மாறி உள்ள திசை காட்டி. இது தெரியாதா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரா கவுன்சிலர் ராமதாஸ் .
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் ஒவ்வொரு தெருக்களிலும் தெருவின் பேரை எழுதி போர்டு வைக்கப்பட்டது. இது வெளியூர் மற்றும் வேறு பகுதியில் இருந்து இருந்து வரும் பொது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது .
ஆனால் இது இன்று பல இடங்களில் அந்த போர்டுகள் உடைந்தும் , அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்தும் காணப்படுகிறது. அதே பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இதனா எந்தவித பிரச்சினையும் இல்லை ஆனால் வெளி ஏரியாவில் இருந்து சின்ன சின்ன தெருக்களை, (முதல் தெரு இரண்டாவது குறுக்கு தெரு போன்று தேடி அலையும் நபர்களுக்கு இது பெரும் பாதிப்பு .

இதில் தற்போது திருச்சி 55வது வார்டில் மாநகராட்சி சார்பில் வைத்து உள்ள செல்வ நகர் 4வது குறுக்குத் தெரு செல்லும் வழி என இருந்த வழிகாட்டி போர்டு ராமச்சந்திர நகர் என காட்டுகிறது . இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக வரும் நபர்கள் இந்த குழப்பத்தில் தெருக்களை சுற்றி வருகின்றனர் .
இது சரியான தெரு பேரை புதிய ஸ்டிக்கர் மூலம் ஒட்டி சரியான திசையில் வைக்க வேண்டும் . அல்லது இந்த போர்டையே அகற்றி விட வேண்டும் என கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள் .
இந்த வார்டு கவுன்சிலர் ராமதாஸ் பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க கூடியவர் .24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கக்கூடிய கவுன்சிலர் ராமதாசுக்கு இந்தப் பிரச்சினை தெரியவில்லையா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரா என தெரியவில்லை .