பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
27ந் தேதி
சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் .
மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளுக்காக தமிழகம் தழுவிய பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர். அதன்படி வருகிற 27 ந் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு சுமை தூக்குவோர் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தலைமை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்த உள்ளனர்.
மேலும் 28ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து நிதான வேலை செய்யும் போராட்டம் நடத்த உள்ளனர்.
மேலும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றவில்லையென்றால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறுகிறது.இந்நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறுவது குறித்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல அலுவலகத்தில்மேலாளரிடம் திருச்சி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.