ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலைஇயில் சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த தற்போது திருப்பூர் பெரியபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு ஒன்றுக்காக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மனைவி சரண்யா உடன் ஜான் வந்துள்ளார். ரவுடி ஜானை காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி, மனைவியின் கண்முன்னே ரவுடியை வெட்டிக்கொன்றது. சேலத்தில் இருந்து திருப்பூர் சென்ற ஜான் (எ) சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவனை காப்பாற்ற வந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீஸ் சுட்டுப் பிடித்தது. பச்சபாளிமேடு பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கார்த்திகேயன் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் அவருடன் சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரும் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

