கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.வெள்ளமை இயக்கத் தலைவர் திருச்சியில் பேட்டி
வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பு. வெள்ளாமை இயக்க தலைவர்
ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயலாளர் வழக்கறிஞர் ஆரோக்கிய நாதன் கலந்து கொண்டு பேசுகையில்:-
தமிழ அரசு கிறிஸ்தவர்களின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மை நல ஆணையத்தில் மக்களுக்காக பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் கிறிஸ்தவ மத பணி செய்யக்கூடிய ஆயர்கள், அருட்தந்தையர்கள் நியமிக்கப்படுவதால் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர்கள் குறிப்பாக கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் உரிமைகள் சலுகைகள் இவ்வளவு காலமாக கிடைக்காமல் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
எனவே இனிவரும் காலத்தில் ஆதிதிராவிட கிறிஸ்தவ பறையர்களுக்கு முன்னுரிமை இன சுழற்சி முறையில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வெள்ளாமை இயக்கம் வலியுறுத்துகிறது
ஏற்கனவே தமிழக அரசின் 2007 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான பிசியில் உள் ஒதுக்கீடு கிறிஸ்தவ மத அமைப்பு தலைவர்களால் வேண்டுமென நிராகரிக்கப்பட்டது .
இதில் கிறிஸ்தவ ஆதிதிராவிட மக்கள் நல பிரதிநிதிகள் முடிவுகள் கருத்தில் கொள்ளப்படாமல் பிற மக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆயர்கள் ஆணையர் கருத்துகளின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. எனவே கிறிஸ்தவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட

வேண்டும் என வெள்ளாமை இயக்கம் தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள பல வகையான நலத்திட்டங்களை 100% மக்களை சென்றடைய மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கென ஒரு அதிகாரியை மாவட்டம் தோறும் நியமிக்க வேண்டுமென வெள்ளாமை இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
ஆதிதிராவிட கிறிஸ்தவ பறையர்களுக்கு பொது தேர்தலில் தனி தொகுதி அல்லாமல் பொதுத் தொகுதியில் வாய்ப்பு அளிக்க விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்பி அவர்களை வாய்ப்பு அளிக்க வேண்டுமென வெள்ளாமை இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இதை போல் தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளும் தங்கள் கட்சியில் உறுப்பினராக உள்ள கிறிஸ்தவ பறையர்களுக்கு பொது தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டுமென வெள்ளாமை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வெள்ளாமை இயக்க நிர்வாகிகள்
மரிய அகில ராஜன், பெலிக்ஸ் ஆனந்த், வேளங் கன்னி, அந்தோனி, செம்பரை ராஜா, ஆகியோர் உடன் இருந்தனர்.