திருச்சி
மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி.

சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று திருச்சியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி கிராப்பட்டி ரெயில்வே பாலம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் இவரை கத்தியால் தாக்கிவிட்டு இவரிடம் இருந்த ரூ 1000 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.
இது குறித்து புகாரின் பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து திருச்சி, கம்பரசம்பேட்டை, பெரியார் நகரைச் சேர்ந்த காக்கா சூரியா (வயது 19) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.