திருச்சியில் தாய்ப்பால் கொடுக்கும் போது பரிதாபம்:
மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பலி

காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
தாய்பால் கொடுக்கும் போது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து . போலீசார் வழக்குப் பதிந்து பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடசந்துார், கள்வர்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 29), இவரது மனைவி தனலெட்சுமி. இத்தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனலெட்சுமி திருச்சி, காந்தி மார்க்கெட்டில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளார். அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.