மாசிமகத்தை முன்னிட்டு
காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்
கோவில்களில் சிறப்பு பூஜை.

மாசி மாதத்தில் பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேர்ந்து வருவதே மாசி மகம் என கூறப்படுகிறது. இந்த நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள் என்றும் கூறுவார்கள். கும்பராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வார், சந்திர பகவான் சிம்ம ராசி மக நட்சத்திரத்திலும் சஞ்ஞாரம் செய்வர் இந்நாளையே மாசிமகம் என்கிறோம்.
இந்நாள் விஷ்ணு பகவான், சிவ பெருமான் மற்றும் முருகபெருமான் ஆகிய 3 தெய்வங்களுக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் புனிதநீராடி விரதமிருந்து இந்த 3 தெய்வங்களையும் வழிபட கடந்த கால சாபங்கள் அனைத்தும் நீங்கி மறு பிறவி கிடைக்காது என்பது ஐதீகம்.
அதேபோல் நீர்நிலைகளில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தை முன்னிட்டு திருச்சியில் பிரசித்தி பெற்ற தளமான
திருவரங்கம் அம்மா மண்பத்தில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதேபோல் திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களில் இன்று மாசி மக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.