சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன்.
தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய கள்ளக்காதலியை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது..
சென்னை வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். 50 (வயது ) வயதாகிறது.. இவர் ஒரு தையல் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (வயது 38) இந்த தம்பதிக்கு தினேஷ் (வயது 19) என்ற மகனும், தேவதர்ஷினி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.
நல்லம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார் செல்வராணி. அதே நிறுவனத்தில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வருபவர் குமரேசன்.
அந்த பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கியிருக்கிறார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை.
இந்நிலையில், செல்வராணிக்கும், குமரேசனுக்கும் நட்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக வளர்ந்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விஷயம், சங்கருக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

எனவே, செல்வராணியை கண்டித்தும், அறிவுறுத்தியும் வந்துள்ளார்.. இதனால், செல்வராணியும், தன்னுடைய போக்கை நாளடைவில் மாற்றிக்கொண்டார்.. குமரேசனிடம் பழகுவதையும் நிறுத்திக் கொண்டதுடன், ஒருகட்டத்தில் குமரேசன் போன் செய்தாலும் எடுக்காமல் விட்டுவிட்டார்.. இது குமரேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது..
இந்நிலையில், கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற செல்வராணி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.. இதனால் பதறிப்போன கணவர், தாழம்பூர் போலீசில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். மேலும் செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது யார் என்று ஆராய்ந்தபோது, அதில் குமரேசன் என்று பதிவாகியிருந்தது. அப்போதுதான் குமரேசனும், கடந்த 4 நாட்களாக வேலைக்கு வரவில்லை என்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது..
இதையடுத்து திருவண்ணாமலைக்கு தாழம்பூர் போலீசார் சென்று, குமரேசன் குறித்து விசாரணை மேற்கொண்டதுடன், அங்கு பதுங்கியிருந்த குமரேசனை சுற்றி வளைத்து கைது செய்து, தாழம்பூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குமரேசனுக்கு 32 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது, மனைவி பெயர் ஜெயஸ்ரீ இவர்களுக்கு யாஷிகா என்ற மகள் இருக்கிறார். நல்லம்பாக்கத்தில் தங்கியிருந்து பணிபுரிந்த போதுதான், செல்வராணியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது..
ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்யும்படி செல்வராணி வலியுறுத்த தொடங்கினாராம்.
இதில் பயந்து போய், செல்வராணியை சம்பவத்தன்று, தன்னுடைய மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக பொய் சொல்லி பைக்கில் ஒத்திவாக்கம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.. அங்கே துப்பட்டா மூலம் கழுத்தை நெரித்து கொன்று, அவரது சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்..
இதைத் தொடர்ந்து, குமிழி காட்டுக்குள் சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த செல்வராணியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குமரேசனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.