தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவராக திருச்சி பூக்கடை பன்னீர்செல்வம் தேர்வு.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
புதிய மாநில தலைவராக பூக்கடை பன்னீர்செல்வம் தேர்வு.
தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஜங்ஷன் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மறைந்த முன்னாள் மாநில தலைவர் இ எம் ஆறுமுகம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்தி பேசினர்.
தொடர்ந்து தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் புதிய மாநில தலைவராக பொதுச்செயலாளராக இருந்த ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.மாநில பொதுச் செயலாளராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய மாநில தலைவர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தர்மராஜ், மாநில இளைஞரணி செயலாளர் சிவசண்முகம், மதுரை மாவட்ட தலைவர் கருப்பையா, ஓ.எப்.டி. தங்கவேலு, அம்பிகாபுரம் ராஜசேகர், பாலாஜி நகர் பாலு, முன்னாள் ராணுவ வீரர் கலியபெருமாள், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் வலங்கைமான் குலாம், மணப்பாறை வந்தே மாதரம் பழனிச்சாமி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.