வேனில் கடத்தி வந்த
ரு 3 லட்சம்
புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் .
வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இரண்டு வாலிபர்கள் ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர் , இதையடுத்து போலீசார் அவர்களை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 421 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்த போது திருச்சி அரியமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரியமங்கலம் நேதாஜி நகர சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் தப்பி ஓடிய லால்குடியை சேர்ந்த இளையராஜா (வயது 40) என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் தடை செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 13 ஆயிரம் ஆகும் .வானில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கு எந்த இடத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.