தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக 8வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள் தடகள சாம்பியன்ஷிப் போட்டி
தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் மற்றும் விடார்ட் குழுமம் திருச்சி இணைந்து
1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான விடார்ட் ரோலிங் கோப்பைகளுக்கான 8வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள் தடகள சாம்பியன்ஷிப்பை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடத்தினர்.
மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 25 பள்ளிகளில் இருந்து கிட்டத்தட்ட 1100 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
7 ஆம் தேதி காலை திருச்சி தேசிய கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் டி பிரசான பாலாஜி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 8 ஆம் தேதி மாலை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
எம்.சங்கரி முத்துசாமி – சர்வதேச தடகள வீரர், வணிக கண்காணிப்பாளர்

திருச்சி- தெற்கு ரயில்வே & டெரிக் அலெக்ஸ், தாரிணி ஸ்ரீனிவாசன், ஏ.டீன் ஆண்டனி ராபின்சன் விடார்ட் குலுமம் திருச்சி ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் ஆர்.கருணாகரன் – செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் நன்றி தெரிவித்தனர்.
8வது ஆண்டாக பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள் தடகள சாம்பியன்ஷிப்பை 1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான விடார்ட் ரோலிங் கோப்பைகளுக்காகவும், மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான விடார்ட் ரோலிங் கோப்பைகளுக்காகவும் இரண்டு வகையிலான போட்டி நடைபெற்றது. இதில் 1 வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் மணவரகள் பிரிவில் முதல் இடத்தை பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும், இரண்டாம் இடத்தை ஆர் எஸ் கே சிபிஎஸ்இ பள்ளியும், மூன்றாவது இடத்தை பாய்லர் பிளாண்ட் நடுநிலைப் பள்ளியும் பெற்றன.
மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும், இரண்டாம் இடத்தை ஆர் எஸ் கே சிபிஎஸ்இ பள்ளியும், மூன்றாவது இடத்தை பாய்லர் பிளாண்ட் நடுநிலைப் பள்ளியும் பெற்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டைத்தை 191 புள்ளிகள் பெற்று கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி விடார்ட் ரோலிங் டிராபியை வென்றது.
அதே போல் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் மணவரகள் பிரிவில் முதல் இடத்தை ஆர்.எஸ்.கே. சி.பி.எஸ்.இ பள்ளியும், , இரண்டாவது இடத்தை மவுண்ட் லிட்டரா ஜீ சி.பி.எஸ்.இ பள்ளியும், மூன்றாம் இடத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சி.பி.எஸ்.இ பள்ளியும் பெற்றன.
மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை ஆர்.எஸ்.கே பள்ளியும், இரண்டாம் இடத்தை க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் இடத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சி.பி.எஸ்.இ பள்ளியும் வென்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டைத்தை 119 புள்ளிகள் பெற்று கைலாசபுரம் ஆர்.எஸ்.கே. சி.பி.எஸ்.இ பள்ளி விடார்ட் ரோலிங் டிராபியை வென்றது.