Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

0

'- Advertisement -

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறவன் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சீதேவிமங்கலத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் அன்பரசன் (51). இவா், அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலா், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை இறங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் பேருந்தை தட்டியுள்ளனா்.

 

இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் அன்பரசன், அவா்களிடம் கேட்டபோது தகாத வாா்த்தைகளால் அவரைத் திட்டியதோடு, தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனா்.

 

இதுகுறித்து, அன்பரசன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள மாரியாயி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 28), ஆலத்தூா் வட்டம், மேலமாத்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விவேக் (வயது 24) மற்றும் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மணிகண்டன், விவேக் ஆகியோரை சிறையிலும்,

17 வயது சிறுவனை திருச்சியிலுள்ள சிறுவா்களுக்கான கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.