Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் இறுதி பட்டியலில் இந்தியில் அச்சடிக்கப்பட்ட பெயர்கள்.

0

'- Advertisement -

தமிழகம் முழுவதும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் சிலரது பெயர்கள் இந்தி மொழியில் அச்சிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டாட்சியர் அலுவகங்கள், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில், 1-வது வார்டு பாகம் எண் 72-ல், 1,265-வது வரிசை எண்ணில் வாக்காளரின் தந்தை பெயர் இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. பாகம் எண் 149-ல், 1,128-வது வரிசை எண்ணில் வாக்காளர் பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர் ஆகியவை இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசியல் கட்சியினர் வருவாய்த் துறையினர் கவனத்துக்கு இதனை கொண்டு சென்று உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.