Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி விழாவை முன்னிட்டு புத்தூர் அருகே இளைய அன்பிலார் தம்பிகள் குழு சார்பில் மாபெரும் அன்னதானம். புத்தூர் மீன் மார்க்கெட் சங்க தலைவர் தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

இன்று திருச்சி புத்துாரில் குழுமாயி அம்மன்கோவில்
குட்டி குடித்தல் திருவிழா.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிகுடித்தல் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமியை வழிபட்டனர்

திருச்சியின் மேற்கு எல்லையில் ஆறுகண் மதகு பகுதியில் கிராம காவல் தெய்வமான குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனுக்கு புத்தூர் மந்தைத்திட லில் பதிவுக் கோயில் உள்ளது. புத்துார் மக்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குழுமாயி அம்மனுக்கு 5 நாள் விழா எடுத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக அன்று இரவு 8 மணிக்கு புத்தூர் பகுதி மக்கள் மேள தாளத்துடன், யானை மீது மலர் மாலை எடுத்துக் கொண்டு குழுமாயி கோயிலுக்குச் சென்று நள்ளிரவு அம்மனை புத்தூர் மந்தைத் திடல் பதிவுக் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

.2ம் நாள் நிகழ்ச் சியாக நேற்று குழுமாயி அம்மன் ஒலைப்பிடாரி யாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்தார். அப்போது பகுதி மக்கள் சுத்தபூஜை எனப் படும் மாவிளக்குடன் தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று (6ம் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு புத்தூர் மந்தைத்திடலில் அறநிலை யத்துறை சார்பில் முதல் ஆடு பலியிடப்பட்டு திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து மக்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஆயிரக்க்கணக்கான ஆடுகள் பணியிடப்பட்டன.ஆடுகளை பலியிட்டு, ஆடுகளின் ரத்தம் குடித்து பக்தர்களை மருளாளி பரவ சப்படுத்தினார். இதற்கு குட்டி குடித்தல் என்று பெயர். அடுத்து நடந்த வீதியுலாவின் போதும ஆடுகள் பலியிடப்பட்டு அந்த ஆடுகளின் ரத்தத்தையும் மருளாளி குடித்தார்.

பின்னர் வீடுகளில் விருந்து, அன்னதானம் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றாலும் புத்தூர் நால்ரோடு அருகே இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் 14ம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை புத்தூர் மீன் மார்க்கெட் சங்கத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார்.
விழா கமிட்டி உறுப்பினர்கள் புத்தூர் கே.கணேஷ். எம்.பி.ஏ, மீன் மார்க்கெட் கே. ரமேஷ்.உள்ளிட்ட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் . அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாப்பிட்ட பின் அன்னதான ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர் .


மேலும் விழாவின் ஒரு பகுதியாக நாளை மஞ்சள் நீராட்டும், மறுநாள் விடை யாற்றி உற்சவமும், அம் மன் கோயிலில் மீண்டும் குடிபுகும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
குழுமாயி திருவிழா வை முன்னிட்டுபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் புத்தூர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது,

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.