கேங்மேன் . பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி
மின்வாரிய அலுவலகம் முன்பு
சிஐடியூ இன்று ஆர்ப்பாட்டம்.
திருச்சி,திருவரங்கம், திருவெறும்பூர் உள்பட 5 இடங்களில் நடைபெற்றது.
மின்வாரியத்தில் 10,000 கேங்மேன் . பணியாளர்கள். 15,000. மதிப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டார்கள். பி. இ; எம்.பி.ஏ. உள்ளிட்ட பல படிப்புகளை முடித்தவர்கள். உள்ளார்கள். மின்வாரியம் கடந்த 1.12.2019 முதல் வாரிய பணியாளர்கள் 80,000 பேருக்கு 6 சத ஊதிய உயர்வு வழங்கியது. ஆனால் 10,000 கேங்மேன் . தொழிலாளர்ககளுக்கு மட்டும் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோன்று. மின்வாரியத்தில் பணியில் சேர்பவர்கள். அவர்கள் அவர்களின் உயர் படிப்பிற்கு ஏற்றார் போல் உள்முக தேர்வில் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் கேங்மேன். பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று. கம்பம் ஏறுதல். மின்தடை நீக்குதல் என்று அத்துனை அடிப்படை பனிகளையும் செய்திடும் கேங் மேன் பணியாளர்களை கள உதவியாளர் ஆக்காமல் 4 ஆண்டு காலமாக வாரியம். காலந்தாழ்த்துகிறது.. போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் கடுமையான வேலை பளுவால் 70 க்கும் மேற்பட்ட கேங்மேன் . தொழிலாளர்கள் வேலை செய்யும் போது உயிர் பலியாகி விட்டார்கள். எனவே சி.ஐ.டி.யு. சார்பாக தமிழ்நாடு முழுவதும் கேங்மேன் தொழிலாளர் கோரிக்கைக்காக இன்று ஆர்ப்பாட்டம் நடப்பதை ஒட்டி திருச்சி தென்னூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர்கள் பழனியாண்டி, மின்துறை பொறியாளர் அமைப்பு இருதய ஜார்ஜ் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
இதே போல் திருவெறும்பூர், துறையூர், லால்குடி, ஸ்ரீரங்கம், பகுதியிலும் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது