திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலக பெயர் பலகை அகற்றப்பட்டது.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகே அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை கட்சி சின்னம் அடையாளத்துடன் வைகோ புகைப்படத்துடன் வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது திருச்சி பாராளுமன்ற அலுவலகம் செயல்படும் இடம் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமானது. மாநகராட்சி இடத்தில் தமது சொந்த கட்சி அலுவலகத்தில் வைப்பது போல பெயர் பலகை வைத்தது சட்ட விதிகளை மீறிய செயல் என பொதுநல ஆர்வலரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஜோசப் சகாயராஜ் கடந்த மாதம் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனை நேரில் சந்தித்து பெயர் பலகை சட்ட விதியின்படி அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதனை பெரிதாக பொருட்படுத்தாத ஆணையர் அலட்சியத்துடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று 3.3.2025 வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் மாநகராட்சி ஆணையர் சரவணனிடம் மீண்டும் முறையிட்டுள்ளார், சரியாக பதில் சொல்லாத காரணத்தினால் எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்து சட்டப்படி நீங்கள் அந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நான் நீதிமன்றத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு செல்வேன் என்று கூறிய பிறகு இரண்டு மணி நேரத்தில் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
நியாயமான விஷயத்திற்கு ஒரு வழக்கறிஞரே போராடி தான் வெற்றிபெற வேண்டிய நிலை இன்று இருக்கிறது என்றால்
சாமானியனுக்கு எப்படி உடனே நீதி கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜன் செயல்பாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.