வரியை ரத்து செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்.
மக்காச்சோளத்திற்கான விற்பனை செஸ் வரி ஒரு சதவீதம் நிர்ணயம் செய்ததை ரத்து செய்ய கோரிக்கை.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்பாட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மண்டல துணைத் தலைவர்கள் ராஜேந்திரன்,சங்கேந்தி தியாகராஜன்,புள்ளம்பாடி வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜமாணிக்கம்,சன்னாவூர் எம். நல்லுசாமி, முருகேசன்,
இளங்கோ ,ராஜகோபால்,மதியழகன்,பாலு,பால்பாண்டி,சக்தி, அரவிந்த்,உடையான் பட்டி செந்தில்
உள்பட திரளான நிர்வாகிகள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.