Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: வீடுபுகுந்து மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை நேற்று திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

 

Suresh

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டியைச் சோ்ந்தவா் அழகு மகன் பிச்சன் (எ) ராஜா (வயது 45). இவா், அதே பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வரும் 25 வயதுடைய மனநலன் குன்றிய பெண் வீட்டில் தனியாக இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.

 

இதுகுறித்து அப்பெண்ணின் தாத்தா அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள ஆய்வாளா் கவிதா தலைமையிலான அனைத்து மகளிா் போலீஸாா், நேற்று திங்கள்கிழமை பிச்சனை கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Leave A Reply

Your email address will not be published.