திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை.
தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சபரி (வயது 14) இவர் பீமநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாண்டி செல்வி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கி வரும் நிலையில் சபரி மூன்று தேர்வுகளை எழுதியுள்ளார். இந்த நிலையில் அந்தத் தேர்வில் சரியாக படிக்காத காரணத்தால் சபரி விரக்தியில் காணப்பட்டார். இதையடுத்து நேற்று காலையில் தாய்
பாண்டி செல்வி பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சபரி மன உளைச்சலில் தேர்வுக்கு பயந்து வீட்டின் அறையின் மின்விசிறி கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சபரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.