திருச்சி கோர்ட் ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் .
திருச்சி ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் நீதிமன்ற ஊழியா்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிந்த ஊழியா் அருண் மாரிமுத்து பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், அவரது மனைவி மற்றும் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அவருக்கு பணி ரீதியாக தொடா்ந்து துன்பங்களை கொடுத்து மனரீதியாக அவரை பாதிப்படையச் செய்து, அவரது உயிரிழப்புக்கு காரணமான நீதிபதியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவா் மீது குற்ற மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதித்துறை ஊழியா்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாண்டியன், மாவட்ட பொருளாளா் ரவிசங்கா் முன்னிலை வகித்தனா்.