Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 464 தமிழக அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார் .

0

'- Advertisement -

திருச்சி செங்குளத்தில்
ரூபாய் 116.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Suresh

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், செங்குளத்தில் ரூபாய் 116.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், குத்து விளக்கு ஏற்றி வைத்து அரசு அலுவலர் குடியிருப்பினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் .சரவணன்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மதுரை சரக மேற்பார்வை பொறியாளர் .எட்வின் சுந்தர்சிங், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர்சி.இருளப்பன், மதுரை சரக கணக்கு அலுவலர் சுதர்சணன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.