திருச்சி: மகா சிவராத்திரியை முன்னிட்டு
மீனாட்சி கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி திருவானைக்காவலில் ஸ்ரீபகவன் நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில்
3 நாட்கள் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல் நாளான நேற்று 26-ந் தேதி புதன்கிழமை அன்று மஹாகணபதி ஹோமம், தேவார இன்னிசை,

சிவபூஜை,
ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2ம் இன்று மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்,
குருகீர்த்தனை, பூஜை
உள்ளிட்டவை நடைபெற்றன.
3ம் நாளான நாளை (28 .2..2025 வெள்ளிக்கிழமை அன்று)
பத்மாவதி வெங்கடேஸ்வரர்
திருக்கல்யாண வைபம், சிவ நாமசங்கீர்த்தனம், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.