திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு.
போலீசார் விசாரணை.
திமுக கொள்கை பரப்பு செயலாளரும்,
எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் சில காலம் பாஜகவில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் உள்ளாா். இவரது வீடு திருச்சி சண்முகா நகரில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த சூர்யாவின் கார் முன் பக்க கண்ணாடியை மர்ம நபா்கள் கல்லால் அடித்து உடைத்து உள்ளனர். இதையடுத்து
இன்று காலை இது குறித்து சூர்யா சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த கட்சியில் சூர்யா இல்லாவிட்டாலும் தனியார் யூடியூப் சேனல்களுக்கு அடிக்கடி அரசியல் கட்சித் தலைவர் பற்றி பரபரப்பு புகார் பெட்டிகளை அளித்து வந்தார். இந்த அரசியல் காரணங்களுக்காக சூர்யாவின் கார் உடைக்கப்பட்டதா, அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.