Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொன்ற கொடூர தாய் .

0

'- Advertisement -

 

திருவள்ளூர் அருகே கள்ளக்காதலுக்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெற்ற மகனையே தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (வயது 27) புவனேஸ்வரி(வயது 25) இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில் மகனுடன் ஜெயந்தி (வயது 43) வசித்து வந்துள்ளாா், ஜெயந்தி தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார், அப்போது ஜெயந்திக்கும் அதே தொழிற்சாலையில் பணியாற்றும் சூப்பர்வைசருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை விட்டு வீட்டிற்கு வந்தால் ஜெயந்தி எந்த நேரமும் சூப்பர்வைசரிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் இதனை மகன் பலமுறை கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தாய் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக மகனிடம் கொடுப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தியை தான் செல்லக்கூடிய கம்பெனிக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தாய் மகன் பேச்சை கேட்காமல் அந்த தொழிற்சாலைக்கே வேலைக்கு சென்று வந்துள்ளார், இந்நிலையில் நேற்றைய முன்தினம் மீண்டும் தனது தாயிடம் கிருஷ்ணமூர்த்தி தான் தனியாக கார் எடுத்து தொழில் செய்ய இருப்பதால் 2 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இல்லையென்றால் நிலத்தை விற்று பணம் அளிக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளாா்.

Suresh

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜெயந்தி மகனை தீர்த்து கட்ட முடிவு செய்து. இரவு முழுவதும் ஜெயந்தி தூங்காமல் தனது மகனை கொள்ள திட்டம் தீட்டி வந்துள்ளார் , நேற்று அதிகாலை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் பெட்ரோலை பாத்திரத்தில் பிடித்து பத்திரமாக வைத்துள்ளார்.

மகன், மருமகள் ,பேரக் குழந்தைகள் ஒன்றாக கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் மகனை மட்டும் தனியாக கொள்ள வேண்டும் என யோசித்த அவர் அப்போது மகனை கொள்வதற்கு மருமகள், பேரக் குழந்தைகள் தடையாக இருப்பதால் மருமகள் ,பேரக்குழந்தைகளை படுக்கையில் இருந்து எழுப்ப முயற்சித்துள்ளார், ஆனால் மருமகள் எழுந்துக்காததால் கால் பாதத்தில் கட்டையால் அடித்து எழுந்து வேலை செய்யுமாறு எழுப்பி உள்ளார், அதேபோன்று படுக்கையில் இருந்த பேரக் குழந்தைகளும் எழுப்பி வெளியே அனுப்பி உள்ளார்.

சரியாக காலை 7 மணி அளவில் மருமகள் பேரக்குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில் ஜெயந்தி தான் பாத்திரத்தில் பிடித்து வைத்திருந்த பெட்ரோலை மகன் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த போர்வை மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி தீ பற்றி அலரி வீட்டிற்கு வெளியே ஓடிவந்துள்ளார், அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர் உடலில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகனையே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அருகே கள்ளக்காதலை மகன் எதிர்த்ததால் பெற்ற மகனையே தாய் படுக்கையில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.