Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மார்க்கெட்டை விட்டு வெளியேறு என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. திருச்சி காந்தி மார்க்கெட் தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் .

0

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க கமிட்டி கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் யூ.எஸ். கருப்பையா தலைமை வகித்தார் செயலாளர் எம்.கே.எம் . காதர் மைதீன், பொருளாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

எந்த வியாபாரிகள் சங்கத்திற்கும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் நாணயமாகவும், நேர்மையாளராகவும் இருத்தல் அவசியம். நமது சங்கத்தின் பெயருக்கேற்ப, தரைக்கடைகள், நிலையான கடை வியாபாரிகள் என ஒற்றுமையுடன் என்றும் இணைந்து செயல்படுவது. காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவரும் வரவு-செலவில் நாணயம் தேவை.

கொரோனாவுக்கு பிறகு எல்லாத் தரப்பிலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதை எல்லோரும் நன்கு அறிவோம். அந்தக் காலகட்டத்தில் காந்தி மார்க்கெட்டைச் சுற்றிலும், மணிகூண்டு கீழேயும், ஆர்ச் அருகிலும், பஸ் நிறுத்தங்களிலும், தஞ்சை ரோடு பால்பண்ணை வரையிலும் உள்ள சாலை ஓரங்களில் உருவான திடீர் காய்கறி, பழக்கடைகள் இதுநாள் வரை அங்கேயே தொடர்ந்து இயங்குவதன் மூலம் தான் காந்தி மார்க்கெட் உள்ளே சில்லரை வியாபாரம் பாதிப்புக்குள்ளானதற்கு முக்கிய காரணம்.

கள்ளிக்குடி மார்க்கெட் என்ற பெரும் அழிவுப் பேச்சை முடிவு கட்டிய ஒரு விஷயத்தை தேவையில்லாமல், காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகளையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில், விஷமத்தனமான ஒரு விஷயத்தை ஒரு சில சுயநல விரும்பிகள் கையிலெடுத்து, தங்களின் சொந்தப் பிரச்சனைக்காக திசை திருப்பி, வியாபாரிகளை சீர்குலையச் செய்ய முயற்சி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், சில்லரை வியாபாரம் காந்தி மார்க்கெட்டிற்குள் பாதிப்புக்குள்ளானதற்கு மற்றொரு முக்கிய காரணம்… இருசக்கர வாகனம். கை வண்டி, தள்ளுவண்டி, மினி வேன்கள் என மாநகரில் உள்ள எல்லா தெருக்களுக்கும், சந்து – பொந்துகளுக்குள்ளும் இரண்டு, மூன்று தடவை விற்பனைக்கு செல்கிறார்கள். மேலும், எல்லா தெருக்களின் முக்குளிலும் நிரந்தரமாக காலை 10.00 மணி வரையில் கை வண்டிகளில் ஃபிரஷ்ஷான காய்கறிகள் 100 கிராம், 200 கிராம் அளவிற்கு, தேவைக்கு ஏற்ப தொடர்ந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் ஒரு முக்கிய காரணம். இதனால் காந்தி மார்க்கெட்டிற்கு பகலில் சில்லரையில் வாங்க வரும் பொதுமக்கள் வருகை தருவது குறைந்து விட்டதும் ஒரு முக்கிய காரணம். ஆனால், தெருக்கில் விற்கும் சிறு வியாபாரிகள் தினசரி வயிற்றுப் பிழைப்பிற்கு செய்யும் இந்த விற்பனையை தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் இயலாது.

ஒரே ஒரு நபருக்கு கடை கிடைக்கவில்லை என்பதால், ஒட்டுமொத்த காந்தி மார்க்கெட்டை சீர்குலைத்து விடுவேன் என பொதுதளத்தில் பகிரங்க எச்சரிக்கை விடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

யாரும் தனிமனித சுதந்திரத்தையும், வியாபாரத்தையும், கெடுக்கும் வகையில் செயல்பட முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலுக்கும் எங்களது ஒற்றுமைச் சங்கம், எக்காலத்திலும் துணை போகாது. மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, வியாபாரிகளின் ஒற்றுமை சீர்குலைக்கும் துரோக முயற்சியிலோ யார் ஈடுபட்டாலும், அவர்களுக்கெல்லாம் எங்களது சங்கம் துணை நிற்காது என்றும், எந்த வகையிலும்.. எந்த ஒரு வியாபாரிக்கும் எங்களது சங்கம் கெடுதுல் செய்யாது என்றும், எங்களது சங்கத்தின் பெயருக்கேற்ப யார் வேண்டுமானாலும், காய்கறி வியாபாரத்தை மொத்தமாகவோ, சில்லரையாகவோ, அல்லது மொத்தம் மற்றும் சில்லரையாவோ வியாபாரம் செய்யலாம்

காந்தி மார்க்கெட்டில் எல்லா வியாபாரங்களும் சிறப்பாக நடைபெற. காந்தி மார்க்கெட் காம்பவுண்டுக்கு உள்ளே மட்டும் வியாபாரம் செய்வது எனவும், பொதுமக்கள் நலன் கருதியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள்நலன் கருதியும், காந்தி மார்க்கெட் காம்பவுண்டுக்கு வெளியே தினசரி போக்குவரத்தை சரி செய்து தர வேண்டும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், போக்குவரத்து காவல்துறையையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மனு கொடுத்த இருவர் அவர்களின் சங்க உறுப்பினர்களை, வாழவைக்கும் நோக்கம் இருந்தால், உங்கள் சொல்லுக்கு அவர்களை கட்டுப்படுத்தி. உங்களுக்கு எதிராக செயல்படும் வியாபாரிகளிடம் சரக்கு வரவு செலவு செய்ய வேண்டாம் என்றும், நீங்களே அந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான காய்கறிகளை வரவழைத்து, நீங்களே அந்த உறுப்பினர்கள் வாழ்வாதாரம் சிறக்கும் வகையில் செயல்பட்டால், எங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.

காந்தி மார்க்கெட்டில் யார் யாருக்கெல்லாம், எந்த ஒரு வியாபாரிகளை பிடிக்காமலோ, ஒத்துப்போகாமலோ இருந்தால் அவர்களின் வரவு – செலவு பாக்கிகளை சரி செய்து கொள்வது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். அதனடிப்படையில் யாரும் யாரிடமும் வியாபாரம் செய்ய பிடிக்கவில்லை எனில் உள்ளூர் வியாபாரியோ, வெளியூர் வியாபாரியோ அந்த அந்த சம்பந்தப்பட்ட கடைகளில் வியாபார வரவு செலவு பாக்கிகளை சரி செய்து கொள்ளவும்,

திருச்சி மாநகராட்சிக்கு நிலையான கடைகளில் வாடகை வரி மூலமாகவும் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த போது, காந்தி மார்க்கெட் உட்பகுதிகளில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைத்து கொடுத்த சிறிய கடைகளின் மூலமாகவும், காண்ட்ராக்ட் குத்தகை மூலமாகவும், வாகனங்கள் வரி மூலமாகவும், தரைக்கடைகள் மூலமாகவும், வருடாவருடம் கோடிக்கணக்கில் நமது வியாபாரிகள் மூலம் வருவாய் கொடுத்து வரும் நிலையில், காந்தி மார்க்கெட்டை விட்டு வெளியேறு என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. எனவே,யாரும் யாரையும் மிரட்டி எதையும் சாதிக்க முடியாது. ஒரு வியாபாரிக்கு நாணயம், நேர்மை, திறமை இவை தான் அழகு என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம்.

இதுநாள் வரை 70 ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி ஒற்றுமையாக இதே காம்பவுண்டுக்குள் செயல்பட்டோமோ, அதே போல் மொத்தம் சில்லரை என இரண்டும் தொடர்ந்து ஒரு சேர ஒற்றுமையுடன் இங்கே செயல்படுவோம் ,

(M.சகாயராஜ் என்ற ஒரு வியாபாரியைத் தவிர) மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் கூட்டத்திற்கு வந்திருந்த கமிட்டி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஜார்ஜ் , பதுருல்லா, ஜம்புலிங்கம் , சீனிவாசன், முகமது அலி, முனியசாமி , துணை செயலாளர்கள் முகமது அனிபா, முருகன் , சகாயராஜ், பெரியசாமி, இலியாஸ் , முருகன் கமிட்டி உறுப்பினர்கள் மைதீன் பிச்சை, கிருஷ்ணமூர்த்தி , ஷாஜகான், வசந்தகுமார், ரம்ஜான் அலி, செல்வகுமார், ரவிச்சந்திரன், சுப்பிரமணி, சதாசிவம், ஐயப்பன், சந்துரு, அபுபக்கர் சித்திக் , செந்தில் குமார் தக்காளி சேகர் சங்க அலுவலர் நாராயணன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.