Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

60,000 மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். திருச்சி நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

0

மின்வாரியத்தில் காலியாக உள்ள
60,000 மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் 2-ம் ஆண்டு பேரவை விழா மற்றும் தோழர். பாலனந்தன் நூற்றாண்டு நினைவு கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா திருச்சியில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது . விழாவிற்கு தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் துணைத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை நாகராசு வாசித்தார். நாராயணசாமி, ஆரோக்கிய செல்வன், செல்வம், ஹேமப்பிரியா, கயல்விழி, இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலை அறிக்கையை வட்ட செயலாளர் இருதயராஜ் வாசித்தார்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்டத் தலைவர் நடராஜன், வட்ட துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழகத்தில் மின் உற்பத்தி தொடரமைப்பு மற்றும் விநியோகத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது. தனியார் வாடகை ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தனியார் புனல் மின் உற்பத்தி கொள்கையை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 60,000 மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொறியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதை கைவிட வேண்டும். தொழிலாளர்களையும் பொறியாளர்களையும் பிரித்தாலும் சூழ்ச்சியை கைவிட வேண்டும். என் மன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில பொதுச் செயலாளர் அருள் செல்வன் நிறைவுரையாற்றினார்.
முடிவில் வட்ட துணைத் தலைவர் அருண்மொழி நன்றி கூறினார். முன்னதாக
தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தோழர். பாலனந்தன் நினைவு கொடியை ஏற்றினார்,

தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில பொதுச் செயலாளர் அருள் செல்வன் கல்வெட்டை திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.