சமயபுரம் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி. மற்றொருவர் கவலைக்கிடம் . இன்று அதிகாலை நடந்த சோக சம்பவம்.
திருச்சியில் இன்று அதிகாலை
சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பக்தர் பரிதாப சாவு.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற மார்ச் 9ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது, இதற்காக மாசி மாதத்தில் திருச்சி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை யாக வந்து சமயபுரம் மாரியம்மனை வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி அருகே உள்ள கீழபழுவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 20 பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன்
கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் நள்ளிரவு மணிகண்டம் விநாயகர் கோவிலில் தங்கி இரவு ஓய்வு எடுத்தனர். பிறகு இன்று விடியற்காலை காலை 4 மணியளவில் புறப்பட்டு பாதயாத்திரை குழுவினர் மெதுவாக நடந்து வந்தனர். அப்பொழுது திருச்சியை அடுத்த
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 2 பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் ஒரு பெண் தூக்கி எரியப்பட்டு சாலை ஓரம் உள்ள முட்புதரில் விசப்பட்டார். மற்றொரு பெண் பக்தர் சாலையின் ஓரத்தில் படுகாயத்துடன் கிடந்தார். சிறிது நேரத்தில் பின் தொடர்ந்து வந்த பாத யாத்திரை குமுவினர் இரு பெண் பக்தர்களும் விபத்தில்
சிக்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.இதில் கீழப்பழுவஞ்சி கிராமத்தில் ஆரம்பசுகாதார நிலைய செவிலியராக பணியாற்றி வரும் வெள்ளையம்மாள் (வயது48) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து
எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்திய ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த சக பெண் பக்தர், வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மற்ற பக்தர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.