Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீ லூசு என மகேஷ் பொய்யாமொழியும், பகுதி நேர அமைச்சர் என அண்ணாமலையும் தாக்கு.

0

மும்மொழியை கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்,அப்போதுதான் ஏழைக் குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது” என முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு திமுகவிரும், கூட்டணி கட்சியினரும் கடுமையாக அண்ணாமலையை எதிர்த்து வருகிறார்கள். தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணாமலையை ‘லூசு’ என்கிற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக தாக்கி இருந்தார்.

இதற்கு சுடச்சுட தனது எக்ஸ் தளப்பதிவில் பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம்… அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.

அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான். சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.

நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்” என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, திமுகவின் ஆதரவு யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய திமுக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையில், எங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறோம் நாங்கள். அதற்கு ஆணித்தரமாக பதிலளிக்க வேண்டும். சில நேரங்களில் அநாகரீகமான முறையில் அதற்கான பதிலை அளிக்கும் நிலையில் அண்ணாமலை இருக்கிறார் என்று சொல்லும் பொழுது நாம் ஒன்றும் பயப்பட தேவையில்லை.

”நான் கோபப்பட தேவையில்லை. நாம் சரியான பாதையில் போகிறோம் என்று அர்த்தம். ”என்னடா இவன்… எது சொன்னாலும் கவுன்ட் கொடுக்கிறான்… அவன் சொல்கிற கவுண்ட் கரெக்டாக இருக்கிறது. நான் கொடுக்கும் கவுண்ட் சரியாக இல்லையே… நம் தலைவர்கள் எல்லாம் நம்மை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறார்களே” என்கிற பயத்தில், நாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை.

நம் துணை முதலமைச்சர் இன்று பேசும்போது நல்லா பேசினார். ‘ஏதோ அறிவாலயத்திற்கு வருகிறேன் என்றாய்… நீ வந்து பார். முதலில் அண்ணா சாலைக்கு வந்து பார்’ என்று சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்படி அந்த லூசு, அண்ணா சாலைக்கு, வந்து ஒரு போஸ்டர் அடித்து போட்டு ‘நான் வந்துட்டேன்’ என்று சொல்லிவிடும். அப்படி வந்தாலும் நீங்கள் அவரிடம் சொல்லுங்கள், ‘பரவாலப்பா தம்பி… நாங்க சொல்றதெல்லாம் கேட்கும் நீ, அந்த பணத்தை மட்டும் வாங்கிட்டு வா தம்பி’ என்று சொல்லுங்கள் அது போதும்.

ஏனென்றால், அவர்களால் அண்ணா சாலைக்கு வந்து போஸ்டர் மட்டும்தான் எடுத்து போட முடியும். பணத்தை எல்லாம் வாங்கி தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை வஞ்சிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ‘நான் தனித்து வந்து மோதுவேன்.. போராடுவேன்’ என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் தனித்து போராடவில்லை. நீ தனித்து விடப்பட்டதனால் இன்று மோதுகிறாறாய்.

எத்தனையோ முறை உன்னை ஓட விட விரட்டி அடித்திருக்கிறோம். நாங்கள் அப்படி என்ன கேட்டோம்? நமக்கான பணத்தைத் தானே கேட்கிறோம். கட்சிக்காகவா கேட்கிறோம்..? நாங்கள் அறிவாலயம் போன்ற புதிய கட்சி அலுவலகம் கட்டவா கேட்கிறோம்..? 43 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் 20150 கோடி ரூபாயில் இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நாங்கள் பணம் தருவோம் என்று சொல்கிறீர்கள். ‘தரமான கல்வியை தர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்’ என்கிறாய்.

சரி, தரமான கல்வி தருகிறோம் என்று சொல்கிறாய்… அதில் என்னென்ன ஷரத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்று போய் பார்த்தீர்கள் என்றால் ஒன்றுமே இல்லை. தேசிய கல்விக் கொள்கையை அப்படியே உள்ளே கொண்டு வந்துவிட்டு இருக்கிறீர்கள். அப்படி தேசிய கல்வி நீ கொண்டு வந்து விட்டால் எப்படி எங்களால் ஒத்துக் கொள்ள முடியும்? தேசிய கல்வியை வடிவமைத்த நீங்கள் முதலில் எங்களை கேட்டு வடிவமைத்தீர்களா?

எங்கள் மாநிலத்திலிருந்து யாராயாவது கூட்டீர்களா? அதற்கு பெயர் ஒத்திசையில் பட்டியல் தானே. ஒத்திசை பட்டியலில் நீயும், நானும் உட்கார்ந்து பேசிவிட்டு முடிவெடுத்து இருக்க வேண்டியதுதானே. எந்த ஒரு கல்வியாளரும் இல்லாமல், நீங்களாக ஒரு குழுவை அமைத்து, இன்று நாங்கள் பேசிய கல்வியை உருவாக்கி விட்டோம் என்று சொல்கிறீர்கள். அது வரைவு திட்டமாக இருக்கும்போதே எங்கள் முதல்வர் எதிர்த்தார். சில கருத்துக்களை நீங்கள் எங்களிடம் கேட்காமலே செய்கிறீர்கள்.

2016ல் கலைஞர் உங்களிடம் இது குறித்து, கேள்வி எழுப்பும்போது, ‘நீங்கள் யாருங்கள்? நாங்கள் இல்லாமலே கல்வி தேசிய கல்வி திட்டத்தை தீட்டுகிறீர்கள்?’ என்று கேட்டார். இன்றைக்கும் அந்த வழியிலேயே நாங்களும் கேட்கிறோம்… அது எப்படி தாங்கள் நினைத்ததெல்லாம் ஒருதலை பட்சமாக நிறைவேற்றிவிட்டு, எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்? திட்டமிட்டு செய்யும்பொழுது எப்படி நாங்கள் அதை ஏற்றுக் கொள்வது? இருமொழிக் கொள்கையில் பெரிய, பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் இரு மொழிகள் கொள்கையில் படித்து வந்தவர்கள் தான்.

ஒரு அறிவியல் சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். இன்று இந்தி என்பாய். நாளை சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வருவாய். அடுத்து இந்த நாலு மந்திரத்தை நீங்கள் படித்தீர்கள் என்றால் நீங்கள் 40 வாங்கலாம். எட்டு மந்திரத்தை பிடித்தால் 80 மார்க் வாங்கலாம் என்று சொல்வீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு தமிழர்களை அடி முட்டாளாக்க பார்க்கிறீர்கள். நாங்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் எதிர்க்கிறோம். நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே, ஆங்கிலம் இருக்கிறது. மேலே தமிழ் இருக்கிறது. இதுதான் இருமொழி கொள்கை. நம்முடைய மொழி என்று வரும் பொழுது, உயிரை விட, பெரியது தமிழ். இன்றைக்கும் ஒட்டுமொத்த உலகத்திலேயே மொழியை காப்பதற்காக உயிரை நீர்த்தம் இனம் என்று சொன்னால், அது தமிழ் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” எனப் பேசி இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.