திருச்சி அரியமங்கத்தில்
போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் பாத்திமாபுரம் 2வது தெரு பகுதி சேர்ந்த நசுருதீன் (வயது24)
அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முகமது மஜீத் ( வயது23 )ஆகிய இருவரையும் அரியமங்கலம் காவல்நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.