Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உறையூரில் கள்ள சந்தையில் மது விற்றவர் கைது. பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்.

0

'- Advertisement -

திருச்சி உறையூரில்
கள்ள சந்தையில்
மது விற்றவர் கைது.பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்.

Suresh

திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது பானங்கள் விற்கப்படுவதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து உறையூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு மது மற்றும் பீர் விற்றதாக ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரிய வந்தது .
அவரிடம் இருந்து பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பீர் மற்றும் மது பாட்டில்கள் என மொத்தம் 90 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உறையூர் காவல் நிலையபோலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.