திருச்சி எ.புதூரில் கோவில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு.
13 வயது சிறுவன் கைது .

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும் சாமி வழிபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று கோவில் பூசாரி ஜெகநாதன் பூஜை முடிந்தபின் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பூஜை சாமான்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது . இது குறித்து ஜெகநாதன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த விசாரணையில் 13 வயது சிறுவன் கோவில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து உள்ளனர்.