சமயபுரம் அருகே கருகலைக்க பணம் பெற்று ஏமாற்றியதாக பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றவர் ஓர் மாதத்திற்கு பின் கைது .
திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. இது தொடர்பான கொலையில், போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த3 ம் தேதியிலிருந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளும், ஒன்றரை மாத காலத்துக்கு பிறகு, குற்றவாளியை கைது செய்திருப்பதும், பலரது கவனத்தை பெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த மாதம் ஜனவரி 3 ம் தேதி, சென்னை திருச்சி பைபாஸ் சாலையோர முட்புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை சமயபுரம் போலீசார் மீட்டனர்.
அந்த பெண் யாரென்று தெரியாமல், மிகத்தீவிரமான விசாரணை நடந்தது.. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போது அந்த பெண்ணை மிகக்கொடுமையாக கொன்றிருப்பதாக, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து, அந்த பெண் யார்? எதற்காக கொலை நடந்தது? என்ற விசாரணை ஆரம்பமானது.
லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் உத்தரவின்படி சமயபுரம் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணைக்காக களமிறங்கினர்..
ஆனால், அப்பெண்ணை பற்றிய எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால், அந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? என்றும் விசாரித்தனர். ஆனால், அப்படி எந்த புகாருமே போலீசுக்கு வரவில்லை. இதனால், இந்த வழக்கில் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், சடலம் விழுந்து கிடந்த பகுதியில் எந்த சிசிடிவி கேமராவும் இல்லை.. அந்த இடத்தை சுற்றி பல கிலோ மீட்டரில் பல்வேறு இடங்களில்தான் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. எனினும், அந்த கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர்.. அதில், கொலை செய்யப்பட்ட பெண்ணை போலவே, ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பதும், அவரை பின்தொடர்ந்து இன்னொரு நபர் சென்று கொண்டிருப்பதும் பதிவாகியிருந்தது. அதாவது ஜனவரி 2 ம்தேதி அந்த பெண் செல்வது பதிவாகியிருந்தது.

பிறகு மறுநாள் 3ம் தேதி பின் தொடர்ந்து சென்ற அதே நபர் சமயபுரம் நால் ரோடு பகுதியில் தனியாக நடந்து செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.. இதையடுத்து, அவரது புகைப்படத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன், அந்த நபர் யார்? என்று கண்டுபிடிக்க துவங்கினார்கள். இதற்காக பல்வேறு மாவட்ட போலீசாரின் உதவியையும் சமயபுரம் காவல்துறையினர் நாடினார்கள்.
அவர்களது உதவியின் படி, திருப்பூர் பஸ் ஸ்டாண்டில், அந்த நபர் இருப்பதை உறுதி செய்து அங்கு வைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்களை விக்னேஷ் வாக்குமூலமாக கூறினார். சிவா என்கிற விக்னேஷுக்கு (வயது 32) திருமணமாகாவில்லை. தன்னுடைய அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வீட்டைவிடடு வெளியே வந்துவிட்டார்.
ஒவ்வொரு ஊராக சென்று மேஸ்திரி வேலை பார்த்து வந்துள்ளார். எங்கு வேலை செய்கிறாரோ, அங்கிருக்கும் கோயில், பஸ் ஸ்டாண்டில் தங்கி விடுவாராம்.
அப்படி ஶ்ரீரங்கத்தில் ஒருநாள் கொத்தனாராக வேலை செய்து விட்டு கோயிலில் தங்கிய போதுதான், ஒரு 40 வயதுடைய யாசகம் வாங்கும் பெண்ணுடன் விக்னேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அந்த பெண் “எனக்கு திருமணமாகி விட்டது. எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து விட்டேன் ” என்று சொல்லி உள்ளார். இதற்கு பிறகு, அந்த பெண்ணை தினமும் சந்தித்து பேசி வந்துள்ளார் விக்னேஷ்.. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவருமே உல்லாசமாக இருந்துள்ளனர்.
பிறகு ஒருநாள், அந்த பெண் விக்னேஷிடம், தான் கர்ப்பமாக உள்ளதால், அதைக் கலைக்க ரூ 13 ஆயிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சென்றாராம். அதற்கு பிறகு அந்த பெண்ணை காணவில்லையாம்.. 2 நாட்கள் கழித்துதான் அந்த பெண்ணை சமயபுரம் பகுதியில் சந்தித்துள்ளார்..
அன்று இரவு இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.. அப்போது அந்த பெண்ணிடம், கரு கலைக்க வாங்கிய பணம் பணம் என்ன ஆச்சு? பணம் வாங்கிய பின்பு பேசாத காரணம் என்ன ? உண்மையிலேயே நீ கர்ப்பமாகத்தான் உள்ளாயா என கேட்டுள்ளார் விக்னேஷ்.. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.
இறுதியில், தகராறு முற்றி அப்பெண்ணின் சேலையிலேயே அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டாராம் விக்னேஷ். என வாக்குமூலமாக தந்ததையடுத்து, தற்போது திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.