காந்தி மார்க்கெட்டில்
லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காந்தி மார்க்கெட் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையில்
போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்பொழுது மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி முயன்றனர். அவர்களில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது இபி ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32) மற்றும் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பதும், இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைபடுத்து 2 பேரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய சங்கலியாண்டபுரத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 30) என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.