திருச்சி 21-வது வார்டில் கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி . கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர் .அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் ஆய்வு.
கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி.
செயல்படாத திருச்சி மாநகராட்சியின் சாட்சியாக,
21-வது வட்டம் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் பல வருடங்களாக, தூர் வாரப்படாமல் இருக்கும் மழை நீர் வடிகால்களால்,
முக்கிய பகுதிகளில் பல மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி, மக்கள் வசிப்பதற்க்கே தகுதியற்ற சூழ்நிலையில் இருக்கிறது.
இதனை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரடியாக கள ஆய்வு செய்து அப்பகுதி பொது மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமருதீன் மற்றும் நத்தர்ஷா பள்ளிவாசல் கலீஃபா சாதக், மக்கள் தினந்தோறும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி எடுத்துரைத்தனர்.
வட்ட செயலாளர் முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர், நாகூர் மீரான், நிர்வாகிகள் மணிகண்டன், வெங்கடேஷ், காதிரி ஜாகிர், சர்தார் ஆகியோர் சுகாதாரமற்ற இடங்களை காண்பித்தனர்.
பாதிப்படைந்த பகுதிகளை, பத்திரிக்கை ஊடக ஊடகவியலாளர்கள், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா ஆகியோர் உடன் சென்று பார்வையிட்டனர்.
மேலும் நோய் பரவும் சூழ்நிலையில் வாழ்ந்து வரும் அப்பகுதி பொதுமக்கள் பல வருடங்களாக தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய் மற்றும் பொய் கிடங்கு போன்று காட்சியளிக்கும் குப்பைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தூய்மைப்படுத்தி தர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இந்த வார்டு திமுக கவுன்சிலருக்கு இந்த வார்டில் வாழும் பொதுமக்கள் பற்றிய எவ்வித கவலையும் கிடையாது என அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.