Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.

0

'- Advertisement -

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி முப்பெரும் விழா.

 

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில்

ஆண்டு விழா, விளையாட்டு விழா,

டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்ற விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர்

கே.எழிலரசி தலைமையிலும், மாநகராட்சி தொடக்க பள்ளி தலைமையாசிரியர் கே.தனலெட்சுமி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், BRTE மேற்கு ஆர். முகமது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

 

தமிழ் ஆசிரியை கே.அருணா அறிக்கை வாசித்தார்.

 

விழாவிற்கு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்.சுரேஷ், மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ,35வது வார்டு திமுக வட்ட செயலாளர் பி.ரெங்கநாதன், பள்ளி மேலாண்மைக்குமு கல்வியாளர் ஆர்.வாசுதேவன், ஆகியோர் சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி,விளையாட்டு போட்டி, போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

 

விழாவிற்கு முன்னாள் தலைமையாசிரியர் டி.தியாகராஜன், வட்டார வள மேற்பார்வையாளர் எஸ்.சரண்யா, எஸ்.புஷ்பவள்ளி, ரோஸ்லின் நிர்மலா, எம்.விஜயகுமார், சாந்தகுமார், ஆர்.ரமேஷ், எம்.அக்ஷயா, ஆர்.நதியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ்.ஹேமமாலினி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ. வறிதா பேகம், முகமது பார்க், முன்னாள் ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள், கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்கள்

நிகழ்வில் மாணவ,மாணவிகளின் நாடகம், நடனம், மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

முடிவில் ஆசிரியர் ராணி

நன்றியுரை கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.