திருச்சி கருமண்டபம்
இளங்காட்டு மாரியம்மன்
கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது .
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் புதிதாக குபேர விநாயகர், சுப்பிரமணியர், பாம்பாளம்மன், ஒண்டிக்கருப்பு, விஷ்ணு துர்க்கை, ஸ்ரீநவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கும் புதிய விக்ரகங்கள், கோபுரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது .
இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம் நடைபெற்று, முதல் கால யாக பூஜைகள் தொடங்குகி. இரவு 8 மணிக்கு முதல் கால பூர்ணாஹுதி, உபச்சாரத்துடன் தீபாராதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (10-ந்தேதி) அதிகாலை 4:30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. காலை 5.30 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்சா ஹுதி நடந்தது. 6 மணிக்கு இரண்டாம் கால மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. 6:30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்படு 7 மணிக்கு விநாயகர் முதல் அனைத்து விமானம் மற்றும் பரிவார மூலவர் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு மகா தீபாராதனையுடன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெயபால், தலைவர் ஞானசேகர்,
செயலாளர் பரமசிவம்,
கௌரவத் தலைவர் பத்மநாதன், பொருளாளர் கண்ணதாசன், துணை தலைவர்கள் அழகிரி , பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் பாலு,சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.