திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். வடமாநில வாலிபரிடம் விசாரணை.
திருச்சி ஜங்சன்
ரெயில் நிலையத்தில்

ரெயிலில் கடத்தி வரப்பட்ட
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.
திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ எடை கொண்ட 107 பாக்கெட்டை புகையிலை பொருட்களை ஒரு நபர் வைத்திருந்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மேற்கு வங்காளம் பர்கானாஸ் சேர்ந்தவர்
ஹபிஜிஸ் காசிவ (வயது32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து
திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். எந்த ரெயிலில் எங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து
ஹபிஜிஸ் காசிவ யை
நிலைய ஜாமினில் விடுத்தனர்.