தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கண்டன உரை .
தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நிதி ஒதுக்காமலும், தமிழ்நாட்டின் பெயரை பட்ஜெட்டில் இடம் பெறாமல் செய்து தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களை புறக்கணித்தும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றியத்தை ஆளும் மோடி அரசை கண்டித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் இன்று கண்டன பொதுக்கூட்டம்
திமுக சார்பில் நடைபெற்றது .
மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார் . மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் கருணாநிதி, சாவல்பூண்டி சுந்தரேசன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் .
மேலும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் மாநில,மாவட்ட,
மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய,நகர,பேரூர் ,வட்ட, வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பகுதி செயலாளர் மருந்து கடை மோகன் நன்றியுரை ஆற்றினார் .