Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இருளில் மூழ்கி கிடக்கும் திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்றம். படிக்கட்டில் உருண்டு விழுந்து போலீஸ்காரர் படுகாயம்.

0

'- Advertisement -

 

கடந்த 4 நாட்களாக
இருளில் மூழ்கிக் கிடக்கும்
திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்ற வளாகம்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் சென்று வருவார்கள். 30க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ள இந்த பாதையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மின்விளக்குகள் எரியாமல் இருந்தன. இதனால் இந்த படிக்கட்டுகள் எப்போதும் இருட்டாகவே காணப்படுகிறது.

நேற்று மாலை 7 மணி அளவில் நீதிமன்ற அலுவல் பணிகளை முடித்துவிட்டு போலீசார்கள் தரைதளத்திற்கு கீழே இறங்கினர்.
அப்பொழுது அங்கு மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் படிக்கட்டுகளில் இருந்து உருண்டு விழுந்து புகழேந்தி என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
அலறல் சத்தம் கேட்டு தரை தளத்தில் இருந்த நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் போலீசார்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கை,கால்களில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயமடைந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மின்விளக்குகள் எரியாத காரணத்தினாலேயே இந்த விபத்து நடந்ததாக நீதிமன்ற பணியாளர்கள் கூறி உள்ளனர்.

ஏற்கனவே குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களிளும் போலீசார்களும் காத்திருக்க கழிவறை வசதி கூட இல்லாத நிலையில், மின்விளக்குகளும் எரியாத காரணத்தினால் இந்த விபத்து நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள், போலீசார்கள் , நீதிமன்ற அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.