19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்ட வயலூர் கோயில் நுழைவாயில் தூண்கள் சரிந்து விழுந்தது. அபசகுணமா? பக்தர்கள் கவலை.
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணியும் நடந்து வருகிறது.
ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் சீரமைப்பு பணியும் நடந்து வருகிறது. தரைதளத்தில் பதித்துள்ள மொசைக் கற்களை பெயர்த்து விட்டு பழைய காலத்தில் இருந்தது போன்று கருங்கற்களால் தளம் அமைப்பதற்கான பணியும், கோயில் மேல்தளம் சீரமைப்பு பணியும் முழுமையாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோயிலில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் பார்வையிடப்பட்டு வருகிறது.
மேலும், இப்பணிகள் தற்போது சுமாா் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.
முழுப் பணிகளும் நிறைவுற்று, கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பா் 19ம் தேதி நடைபெற உள்ளது .
இந்த நிலையில் இன்று வயலூர் திருக்கோவிலுக்கு செல்வதற்காக சோமரசம்பேட்டை கோப்பு மெயின் ரோட்டில் இருந்த நுழைவாயில் பழுதடைந்ததால் அதன் அருகில் உபயோகங்களும் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நுழைவாயில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது .
இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு இன்று குறுக்கே காங்கிரட் பீம் அமைக்கும் பணி நடைபெற்றது.
அதிகாலை தொழிலாளர்கள் பீம் அமைக்கும் பணியினை முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் திடீரென சாரம் சரிந்ததால் இருபுறமும் கட்டபட்ட தூண்கள் மற்றும் பீம் முழுவதுமாக சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் நம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது .
முருகன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள நிலையில் தூண்கள் சரிந்து விழுந்த விவகாரம் பக்தர்கள் அபசகுணமாக நினைத்து பெரும் வேதனையை அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் .