தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (வயது 40). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் 4 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சி. சியாமளாதேவி பரிந்துரையின் பேரில் இவரை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, நேற்று மணிகண்டன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.