திருச்சி தென்னூரில் துணிகரம் :
டாஸ்மாக் கடையின்
பூட்டு உடைப்பு.
மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி, எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 51). இவர் தென்னுார், குப்பன்குளம் டாஸ்மாக்கில் மேல்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று மறுநாள் காலை எப்போதும் போல் கடையை திறக்க திரும்பி வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, ஆனால் உள்ளிருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.
இது குறித்து கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.