Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: வெளிநாட்டு வேலை மோகம் . ரூ.19 லட்சத்தை புரோக்கரிடம் இழந்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சியில் வெளிநாட்டு வேலை கிடைக்காததால் விரக்தியில்
பூச்சி மருந்து குடித்து
வாலிபர் தற்கொலை.
கோட்டை போலீசார் விசாரணை.
இது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 28). இவர் வெளிநாட்டு வேலைக்காக தன் உறவினர்கள் 15 பேரிடம் ரூ.19 லட்சம் வரை கடன் வாங்கி அதை முத்துசெல்வம் என்ற புரோக்கரிடம்  வெளிநாட்டில் வேலை வாங்கி தர வேண்டி கொடுத்து உள்ளார்.

Suresh

இந்நிலையில் முத்து செல்வம் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் வசந்தை ஏமாற்றியுள்ளார். இதில் மனஉளைச்சலில் இருந்து வந்த வசந்த் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அவரை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு வசந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.